தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏழைகளுக்கு குறைந்த விலையில் டயாலிசிஸ்! - 500 ரூபாய் கட்டணத்தில் டயாலிசிஸ்

நாமக்கல்: தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஏழைகளுக்கு குறைந்த விலையில் டயாலிசிஸ் என்னும் ரத்த சுத்திகரிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

ஏழைகளுக்கு குறைந்த விலையில் டயாலிசிஸ்!
ஏழைகளுக்கு குறைந்த விலையில் டயாலிசிஸ்!

By

Published : Jan 28, 2021, 3:14 PM IST

கரோனா காலத்தில் ஏழை மக்கள் அதிகளவு டயாலிசிஸ் செய்ய முடியாமல் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியதோடு பலரும் உயிரிழந்தனர். இதனைக் கருத்தில் கொண்டு நாமக்கல் யுனெடெட் வெல்பேர் ட்ரஸ்ட் மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் 500 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்திலும் டயாலிஸ் செய்யும் வகையில் புதிய ரத்த சுத்திகரிப்பு இயந்திரம் நாமக்கல்லில் அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கலந்துகொண்டு புதிய இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது வெளியிடங்களில் ரத்த சுத்திகரிப்பு செய்ய 2ஆயிரத்து 500 ரூபாய்க்கு குறைவில்லாமல் கட்டணம் வசூல் செய்யும் நிலையில் இங்கு ஏழைகளுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு 500 ரூபாய் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளனர், இது மிக குறைவான கட்டணம் இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:அரசு மருத்துவமனைக்கு இரண்டு ஹீமோ டயாலிசிஸ் இயந்திரங்கள்

ABOUT THE AUTHOR

...view details