நாமக்கல்: நாமக்கல் மோகனூர் சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சுமார் 200 மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் உதவி பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், கிரிஸ்டல் என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணிகள், மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு, செவிலியர், மருத்துவர்களுக்கு உதவியாளர் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவர்கள் பணியமர்த்தபட்டனர். இந்த நிறுவனம் இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 650 சம்பளமாக அளிக்கப்படும் என்று ஒப்பந்தம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் நாள் ஒன்றுக்கு தங்களுக்கு 350 ரூபாய் மட்டுமே வழங்குவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இதனை முழுமையாக வழங்கிட வேண்டும் எனவும், பணியாளர்களுக்கு உடை மாற்றும் அறை வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதையும் படிங்க:Pragyan rover: நிலவில் என்ன செய்யப் போகிறது ரோவர் - 14 நாட்கள் இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்கள்!