தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதயாத்திரை சென்ற பக்தர் பாம்பு கடித்து பலி

நாமக்கல்: சமயபுரத்திற்கு பாதயாத்திரை சென்ற பக்தர் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் படுத்து தூங்கும் போது, பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

bite
bite

By

Published : Jan 11, 2021, 6:43 PM IST

திருச்செங்கோட்டை அடுத்த சாலப்பாளையம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி (28). இவருக்கு வசந்தி என்ற மனைவியும், 3 வயதில் மகனும் உள்ளனர். நந்தகுமார் தனது நண்பர்கள் 15 பேருடன் சமயபுரத்துக்கு திருச்செங்கோட்டில் இருந்து பாதயாத்திரையாக நேற்று புறப்பட்டார். இன்று அதிகாலை, 1 மணி அளவில் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது, ஆறு பேர் நடந்து சென்ற நிலையில், நந்தக்குமார் உள்ளிட்ட 9 பேர் மட்டும் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன் படுத்து உறங்கியுள்ளனர்.

தூங்கிக்கொண்டிருந்த நந்தக்குமார் திடீரென கத்தியுள்ளார். சத்தம் கேட்டு அருகில் படுத்திருந்த நண்பர்கள் எழுந்து பார்த்த போது நந்தகுமாரை பாம்பு ஒன்று கடித்துள்ளது. உடனே பாம்பை அடித்துக்கொன்ற அவர்கள், வலியால் துடித்த நந்தகுமாரை, அவ்வழியாக சென்ற லாரியை நிறுத்தி ஏற்றிக் கொண்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நந்தகுமார் பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நல்லிபாளையம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பாதயாத்திரை சென்ற பக்தர் பாம்பு கடித்து இறந்த நிகழ்வு, சக பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இருபுறத்திலும் புதர் மண்டி கிடப்பதை உடனடியாக சுத்தம் செய்யவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: புதுக்கோட்டை, தேனியிலும் ஜல்லிக்கட்டு! - அரசாணை வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details