நாமக்கல்: தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர், ஒப்பந்த அடிப்படையில் ஆறு ஆண்டுகளாக பணியாற்றும் 11 ஆயிரம் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக 14 ஆயிரம் ரூபாய் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.