காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேற்று (ஜூன் 14) காலை நாமக்கல் மாவட்டத்தை வந்தடைந்தது.
அப்படி வந்த தண்ணீரை நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றுப் பகுதியில் வாய்க்கால் வெட்டி அரசின் இலவச மின்சாரத் திட்டத்தைப் பயன்படுத்தி சிலர் திருடி விற்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து மோகனூர் நீரேற்றுப் பாசன கூட்டுறவுச் சங்கத் தலைவர் செல்ல. ராசாமணி என்பவர் கூறுகையில், "மோகனூரைச் சேர்ந்த அஜித்தன் என்பவர் தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக உள்ளார்.
அவர், தனது 30 ஆடி ஆழக் கிணற்றிற்கு 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் இலவச மின்சார இணைப்பைப் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் அதே கிணற்றிற்கு மார்ச் மாதம் வணிகப் பயன்பாடு என்ற பெயரில் மேலும் ஒரு மின் இணைப்பைப் பெற்றுள்ளார்.