நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி, ஆண்டாபுரம், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகளை உயிரியல் பாதுகாப்பு முறையில் அப்புறப்படுத்தாமல், திறந்தவெளியில் சாலையோரமாக வீசிச் செல்லும் நிலை தொடர்ந்து நிலவி வருவதாகப் அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தற்போது கோழிகளுக்கு கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்புள்ள நிலையிலும், கோழிகள் மூலம் 'கொரோனோ வைரஸ்' பரவுவதாக வாட்ஸ் ஆப்பில் வந்த வதந்திகளாலும் கோழி இறைச்சிகளை பொதுமக்கள் சாப்பிட அச்சமடைந்துள்ளனர். இதனிடையே, கறிக்கோழி விலையும் கடுமையாகச் சரிவடைந்துள்ளது.