தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டப்பகலில் பயங்கரம்: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் துணிகரம் ! - தனியார் பள்ளி

நாமக்கல்: பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

File pic

By

Published : Jun 15, 2019, 10:17 AM IST

நாமக்கல் அருகே உள்ள நல்லிப்பாளையத்தைச் சேரந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி வசந்தி. வசந்தியின் சகோதரர் ரமேஷ். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் வசந்தி ரமேஷின் மகன்களை பள்ளியில் இருந்து அழைத்துவர சென்று உள்ளார். அப்போது அவரை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர் மோட்டார் சைக்கிளில் வந்து வசந்தி அணிந்திருந்த 8 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த வசந்தி கூச்சலிடவே அங்கு பொது மக்கள் திரண்டனர்.

நகையை பறிகொடுத்த பெண்

இது குறித்து தகவலறிந்த நல்லிப்பாளையம் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் சங்கிலி பறிப்பு சம்பவம் பெரும் மக்களிடையை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details