நாமக்கல் ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை தமிழ்நாட்டில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதனையடுத்து காவல் துறையினர் பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்த 11 பேரை கைது செய்தனர்.
பச்சிளங்குழந்தைகள் விற்பனை: நீதிமன்றக் காவல் நீட்டிப்பு - நீதிமன்ற காவல்
நாமக்கல்: பச்சிளங்குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதானவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
File pic
அவர்களை ஏற்கனவே நீதிமன்றம் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றுடன் (ஜூன் 6) காவல் முடிவடைந்தது. இதனையடுத்து, அவர்களை நாமக்கல் முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கருணாநிதி முன்னிலையில் 11 பேரை மீண்டும் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை ஜூன் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.