நாமக்கல் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மலைக்கோட்டை. திப்புசுல்தான் காலத்தில் உருவான நாமக்கல் மலைக்கோட்டை தற்போது நாமக்கல் மாவட்டத்தின் புராதன சின்னமாக விளங்கிவருகிறது. இந்த மலைக்கோட்டை தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், நாமக்கல் மலைக்கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், காதலர்கள் மலைக்கோட்டையின் உயரமான இடங்களில் மக்கள் பார்க்கக்கூடிய இடங்களில் அமர்ந்து தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், தங்களது பெயரை உயரமான இடங்களில் எழுதுவது, செல்ஃபி எடுப்பது உள்ளிட்ட செயல்களை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
மலைக்கோட்டையில் உள்ள புதர் பகுதிகளில் அமர்ந்து ஒரு சிலர் மது அருந்திவிட்டு கண்ணாடி பாட்டில்களை அங்கேயே விட்டுச் செல்கின்றனர். அதேபோல் சுற்றுலாப் பயணிகளும் உணவு, தின்பண்டங்களின் காகிதங்களை அங்கேயே விட்டுச் செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல்தான் பாதிப்பு அடைகிறது.