நாமக்கல்:குமாரபாளையத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர், பிரிமியர் பத்மினி ரக காரில் சென்றுள்ளார். அதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின்னர் இந்த கார் குறித்து விசாரித்தபோது தான், அது மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய கார் எனப் பலருக்கு தெரியவந்துள்ளது.
அதாவது, அதிமுக உருவாகும்போது அதன் நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆருக்கு, குமாரபாளையத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.எம் குழுமத்தின் சார்பில் பிரிமியர் பத்மினி ரக கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் பொழுது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பெரும்பாலும், இந்த காரையே பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.