பருத்தி விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் வேதனை ! - விலை வீழ்ச்சி
நாமக்கல் : பருத்தி விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர்.

பருத்தி விலை கடும் வீழ்ச்சி
நாமக்கலில் வாரந்தோறும் வியாழக்கிழமை நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பருத்தியை நாமக்கல் கூட்டுறவு சங்க வளாகத்தில் ஏலம்விடுவது வழக்கம். கடந்த வாரங்களில் பருத்தியானது கிலோ 65 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் பருத்தியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி கிலோ 61 ரூபாய் வரையிலும் ஏலம் விடப்பட்டது.
நாமக்கல்லில் பருத்தி விலை கடும்வீழ்ச்சி - விவசாயிகள் வேதனை