தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பருத்தி ஏலம்: 4 ஆயிரம் மூட்டைகள் 65 லட்சத்திற்கு விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி - 4 thousand bundles sold for 65 lakhs

நாமக்கல் : நாமக்கலில் உற்பத்தி செய்யப்பட்ட 4 ஆயிரம் பருத்தி மூட்டைகள் 65 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பருத்தி ஏலம்: 4 ஆயிரம் மூட்டைகள் 65 லட்சத்திற்கு விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி
பருத்தி ஏலம்: 4 ஆயிரம் மூட்டைகள் 65 லட்சத்திற்கு விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி

By

Published : Aug 18, 2020, 8:02 PM IST

நாமக்கல்லில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இன்று(ஆக.18) நடைபெற்ற ஏலத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், பவித்ரம், துறையூர் முசிறி உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதியில் இருந்து, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் குவிண்டாலுக்கு ரூ. 4,910 முதல் ரூ.5,019 வரையிலும், சுரபி இரகம் ரகம் குவிண்டாலுக்கு ரூ. 5,100 முதல் ரூ. 5,369 வரையிலும் ஏலத்திற்கு விடப்பட்டது. ஏலத்தில் நான்காயிரம் மூட்டைகள் 65 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த விலை கடந்த ஜூலை மாத விலையை விட கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும், இது தங்களுக்கு சற்று மகிழ்ச்சி அளிப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த ஏலத்தில் சேலம், மகுடஞ்சாவடி, திருப்பூர், ராசிபுரம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 15க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்திகளை கொள்முதல் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details