இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மூன்று பேருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், நாமக்கல் மாவட்ட இந்திய மருத்துவ சங்க கிளையின் சார்பில், செய்தியாளர்கள் கரோனா பாதிப்பிலிருந்து எவ்வாறு தங்களை காத்துக் கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் சுகாதார பணி இணை இயக்குனர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இந்திய மருத்துவ சங்கம் நாமக்கல் மாவட்ட கிளையின் தலைவர் டாக்டர் சதீஷ்குமார் மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.