தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல்லில் செவிலியருக்கு கரோனா பாதிப்பு - Corona Vulnerability Namakkal nurse

நாமக்கல்: நகராட்சி பகுதியில் வசித்துவரும் செவிலியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் செவிலியருக்கு கரோனா பாதிப்பு
நாமக்கல்லில் செவிலியருக்கு கரோனா பாதிப்பு

By

Published : Apr 17, 2020, 4:05 PM IST

Updated : Apr 17, 2020, 5:30 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு 50ஆக உயர்ந்துள்ளது. நேற்று புதியதாக 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் இவர்களில் 3 பேர் டெல்லி சென்று வந்தவர்களின் உறவினர்கள். ஏற்கனவே தொற்று பாதிப்புக்கு உள்ளான லத்துவாடி பகுதியில் பணியாற்றிய செவிலியர் மற்றும் தூய்மை பணியாளர் என இருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து செவிலியர் வசித்து வரும் நாமக்கல் என்.ஜி.ஒ.எஸ் காலனி பகுதியை நகராட்சி அலுவர்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து 300க்கும் மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு காவல் துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

நாமக்கல்லில் செவிலியருக்கு கரோனா பாதிப்பு

தொடர்ந்து அங்குள்ள தெருக்கள் மற்றும் வீடுகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இது குறித்து நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாஷா கூறுகையில், "இப்பகுதியில் வசித்த ஒருவருக்கு புதியதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருள்களும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: மாங்காய் சந்தைகளை ஏற்படுத்தித் தர விவசாயிகள் கோரிக்கை

Last Updated : Apr 17, 2020, 5:30 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details