சென்னையில் செப்டம்பர் 14ஆம் தேதியில் இருந்து மூன்று நாட்களுக்கு சட்டப்பேரவை அலுவல் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு வருகை புரியும் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவிறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, அனைத்து உறுப்பினர்களுக்கும் நேற்று (செப் 11) அவர்கள் இருக்கும் பகுதிகளில் தொற்றுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
திருச்செங்கோடு எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று உறுதி - தனியார் மருத்துவமனை
நாமக்கல்: திருச்செங்கோடு அதிமுக எம்எல்ஏ பொன்.சரஸ்வதிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona infection for tiruchengode MLA in Namakkal district
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு தொகுதியின் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள பொன்.சரஸ்வதிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர், எம்எல்ஏ பொன்.சரஸ்வதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.