தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு எட்டாயிரத்தைக் கடந்து பதிவாகி வருகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக வேட்பாளருமான கே.எஸ்.மூர்த்தி நேற்று (ஏப்.16) உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
பரமத்திவேலூர் சட்டப்பேரவை உறுப்பினருக்கு கரோனா - paramathiveluur dmk candidate k s moorthy
நாமக்கல்: பரமத்திவேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.மூர்த்திக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பரமத்திவேலூர் சட்டப்பேரவை உறுப்பினருக்கு கரோனா தொற்று உறுதி
பரிசோதனையின் முடிவில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக கோயம்புத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:’என் நெருங்கிய நண்பர் விவேக்கின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது’ - ரஜினி