கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பலர் வேலையின்மையால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்காக தவித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை தன்னார்வலர்கள் உதவியுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் விநியோகத்து வருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் 2 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரம் கிலோ அரிசியை, மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தியிடம் வழங்கினர்.