நாமக்கல்:குமாரபாளையத்தில் செயல்பட்டு வரும் காவல் நிலையத்தின் பக்கவாட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளான வாகனங்கள் உட்பட இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்காக அமைக்கப்பட்டுள்ள கேட்டிற்கு பூட்டு போடாமல் காவல் நிலையத்தில் உள்ள கைதிகளுக்கு, பயன்படுத்தக்கூடிய கைவிலங்கினைக் கொண்டு பூட்டாக போட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டத்தின் படி குற்றவாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய கைவிலங்கை, மாற்றாக பொதுப்பயன்பாட்டிற்கு காவலர்கள் பயன்படுத்தி இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளதுடன் பேசு பொருளாகவும் மாறியுள்ளது. இதனால் கேட்டில் உள்ள கைவிலங்கை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், கைவிலங்கை தவறாகப் பயன்படுத்திய நபர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.