தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிவாரணம் வழங்காத அரசைக் கண்டித்து கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - பரமத்திவேலூர் அருகே நிவாரண உதவித்தொகை மற்றும் பொருட்களை வழங்காத தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே நிவாரண உதவித்தொகை மற்றும் பொருட்களை வழங்காத தமிழ்நாடு அரசைக் கண்டித்து பொத்தனூரில் அமைப்புசாரா கட்டுமானத் தொழிலாளர்கள் சமூக இடைவெளிவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம் பொத்தனூரில் நிவாரணம் வழங்காத அரசை கண்டித்து கட்டுமான தொழிலாளர்கள்  ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் பொத்தனூரில் நிவாரணம் வழங்காத அரசை கண்டித்து கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : May 7, 2020, 10:02 PM IST

கரோனா வைரஸ் நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், அமைப்புசாரா கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவித்தொகை ரூபாய் ஆயிரம் , நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாகியும் தமிழ்நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவித்தொகை, நிவாரணப் பொருட்கள் வழங்காததைக் கண்டித்து நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத் தலைவர் வேலுப்பிள்ளை தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் பொத்தனூரில் நிவாரணம் வழங்காத அரசை கண்டித்து கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பரமத்திவேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பழனிசாமி தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து செல்ல அறிவுறுத்தினார். அதன்பின் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:

நிவாரணம் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details