நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் அருகே உள்ள பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (55). இவர் வெண்ணந்தூர் ஒன்றிய காங்கிரஸ் பிரமுகராவார். இவர் வீட்டில் தனியாக வசித்துவந்த நிலையில் திடீரென்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் வெண்ணந்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது பன்னீர்செல்வம் அழுகிய நிலையில் சடலமாக இருந்துள்ளார்.