நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். வியாபாரத்தை முடித்துவிட்டு வழக்கம்போல நேற்றிரவு ஊழியர்கள் கடையை மூடி சென்றனர்.
நாமக்கல் கம்ப்யூட்டர் விற்பனை கடையில் ரூ.5 லட்சம் திருட்டு!
நாமக்கல்: பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த எலக்ட்ரானிக் கடையில் ரூ.5 லட்சம் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இன்று காலையில் கடையை திறக்க வந்த உரிமையாளர் ராஜகோபால் கடையின் பூட்டு உடைத்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கடைக்குள் வைத்திருந்த ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் திருடு போயிருந்தது. இது குறித்து நாமக்கல் காவல்நிலையத்தில் ராஜகோபால் புகார் அளித்தார். இதன்பேரில் நாமக்கல் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கடையில் உள்ள சிசிடிவியில் அதிகாலை 3.15 மணிக்கு கறுப்பு பர்தா அணிந்த ஆசாமி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணம் எடுத்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதனை ஆதாரமாக வைத்து, அடையாளம் தெரியாத நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம், நாமக்கல் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.