தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வண்ண அட்டைகள் இருந்தால் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க அனுமதி!

நாமக்கல்: வண்ண அட்டைகள் இருந்தால் மட்டுமே அத்தியாவசிய பொருள்கள் வாங்க காவல் துறையினர் அனுமதியளிகிறனர்.

அட்டைகளை ஆய்வு செய்யும் காவல் துறையினர்
அட்டைகளை ஆய்வு செய்யும் காவல் துறையினர்

By

Published : Apr 14, 2020, 10:05 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 9ஆம் தேதி முதல் சிவப்பு, பச்சை, நீலம் என மூன்று வண்ண அட்டைகள் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டன.

இந்த அட்டைகளை பயன்படுத்தி வாரத்தில் இரண்டு நாள்களுக்கு மட்டுமே வீட்டிலிருந்து வெளியே வந்து பொருள்களை வாங்கிச் செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்றுடன் மாவட்டம் முழுவதும் வண்ண அட்டைகள் பொதுமக்களுக்கு வழங்கும் பணி நிறைவடைந்தது. நேற்று காலை முதல் நாமக்கல்லில் அத்தியாவசிய பொருள்களை வாங்க வரும் பொதுமக்களில் நீல நிற வண்ண அட்டைகள் வைத்திருந்தவர்களை மட்டுமே காவல் துறையினர் நகருக்குள் அனுமதித்தனர்.

அட்டைகளை ஆய்வு செய்யும் காவல் துறையினர்

அட்டை இல்லாதவர்களையும் மற்ற நிற அட்டைகள் வைத்திருந்தவர்களையும் காவல் துறையினர் திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் நகருக்குள் பொதுமக்களின் கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது.

இதையும் படிங்க: செங்கத்தில் நாளை முதல் நான்கு மளிகை கடைகள் மட்டுமே திறக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details