நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணாயிரம். இவரது மகள் அனிதா (20) அப்பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (பிப். 2) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அனிதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாணவியை மீட்டு ராசிபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
'என்னுடைய அக்கா இறந்ததற்கு நீங்கள்தான் காரணம்'
இந்நிலையில், மாணவியின் காதலன் வல்லரசு, அவரது நண்பர் அய்யன் உள்ளிட்ட இரண்டு இளைஞர்கள் மாணவியின் வீட்டிற்கு வந்து விசாரித்துள்ளனர். அப்போது இறந்த மாணவியின் தங்கை, 'என்னுடைய அக்கா இறந்ததற்கு நீங்கள்தான் காரணம்' எனக் கூறி அடித்துள்ளார்.
அப்போது மாணவியின் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து இளைஞர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.