நாமக்கல் மாவட்டத்தில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இங்கு வெளிநாட்டில் இருந்து வந்துள்ள 635 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்று நாமக்கல் திரும்பிய 24 பேர் தற்போது அரசு மருத்துவமனைகளில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் வசித்து வந்த பகுதிகள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே நாமக்கல் மஜித் தெரு, மேட்டு தெரு, பாவடி தெரு உள்ளிட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், காவல் கண்காணிப்பாளர் அருளரசு, மருத்துவக் குழுவினர் அங்கன்வாடி பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.