தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தினம்தோறும் ரூ. 25 கோடி தேங்காய் வர்த்தகம் பாதிப்பு! - நாமக்கல்லில் தேங்காய் வர்த்தகம் தினசரி 25 கோடி ரூபாய் பாதிப்பு

நாமக்கல்: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளி மாநிலத்திற்கு செல்லும் லாரி ஓட்டுநர்கள் அச்சம் அடைந்துள்ளதால், தினம்தோறும் 25 கோடி ரூபாய் தேங்காய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

முளைத்துக் கிடக்கும் தேங்காய்கள்
முளைத்துக் கிடக்கும் தேங்காய்கள்

By

Published : Mar 30, 2020, 6:53 PM IST

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய்களை அங்குள்ள விவசாயிகளிடமிருந்து, வியாபாரிகள் மொத்தமாக வாங்கிக்கொள்கின்றனர்.

பின்னர் மண்டியில் வைத்து தேங்காய்களை உரித்து மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு தினசரி 250க்கும் மேற்பட்ட லாரிகளில் அனுப்புகின்றனர். இந்த தொழிலில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 144 தடை உத்தரவு பிற்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் வெளி மாநிலத்திற்குச் செல்ல லாரி ஓட்டுநர்கள் அச்சப்படுகின்றனர். தமிழ்நாட்டில் தேங்காய் ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நாள் ஒன்றுக்கு சுமார் 25 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

முளைத்துக் கிடக்கும் தேங்காய்கள்

மேலும், அனைத்து தேங்காய்களும் முளைத்து தென்னங்கன்றுகளாக வளர்ந்துள்ளன. மத்திய, மாநில அரசுகள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேங்காய் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசிடம் உதவி கோரும் வடமாநில தொழிலாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details