தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல் எம்எல்ஏ-வின் தாயார் மறைவு -  நேரில் சென்று துக்கம் விசாரித்த முதலமைச்சர்

நாமக்கல்: சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கரனின் தாயார் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று துக்கம் விசாரித்தார்.

cm palanisamy
cm palanisamy

By

Published : Feb 25, 2020, 12:16 PM IST

நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினரான கே.பி.பி. பாஸ்கரனின் தாயார் பழனியம்மாள் கடந்த 20ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு இரங்கல் தெரிவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நாமக்கல் சென்றார். அப்போது பாஸ்கரன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பழனியம்மாள் திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கரனிடம் துக்கம் விசாரித்தார். அவருடன், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா உடனிருந்தனர்.

இந்த நிகழ்வின் போது கறிக்கோழி பண்ணையாளர்கள் மற்றும் முட்டைக்கோழி பண்ணையாளர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இது குறித்து கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் துணைத்தலைவர் டாக்டர் செல்வகுமார் கூறுகையில், "சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவல்களால் கடந்த 10 நாட்களில் கறிக்கோழி விலை கிலோ ஒன்றுக்கு முப்பது ரூபாய் வரை கடுமையாக வீழ்ச்சியடைந்து, தங்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவுவதைத் தடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முதலமைச்சரிடம் மனு அளித்தோம்" என அவர் தெரிவித்தார்.

துக்கம் விசாரித்த முதலமைச்சர்

இதையும் படிங்க: ’சிஏஏ சட்டத்தால் மிக மோசமாக பாதிக்கப்படப்போவது பெண்கள்தான்’ - கனிமொழி

ABOUT THE AUTHOR

...view details