நாமக்கல் நகராட்சி மோகனூர் சாலை பழைய நீதிமன்ற வளாகத்தில், வணிக வரித்துறைக்கு ரூ.3.45 கோடி மதிப்பில் புதிய அலுவலக கட்டடம் மற்றும் கூட்டரங்கம் உள்ளிட்ட மூன்று மாடி கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டது. இதனை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
ரூ. 3.45 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வணிக வரித்துறை அலுவலகம்! - Cm palanisamy opens rs. 3.45 crore worth commercial tax office
நாமக்கல்: ரூ. 3.45 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட வணிக வரித்துறை அலுவலக கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
commercial tax office
நாமக்கல் புதிய வணிக வரித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கலந்துகொண்டு புதிய அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் வணிக வரித்துறை அதிகாரிகள், அலுவலர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சொத்துவரி அரசாணை, சீராய்வு குழு அமைப்பு - எஸ்.பி. வேலுமணி!