தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகன நிறுத்தமாக மாறிய மணிக்கூண்டு - போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் - வாகன ஓட்டிகள் அவதி

நாமக்கல்: இருசக்கர வாகன நிறுத்தமாக மணிக்கூண்டு பகுதி மாறியதால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய, அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாகன நிறுத்தமாக மாறிப்போன மணிக்கூண்டு - நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்
வாகன நிறுத்தமாக மாறிப்போன மணிக்கூண்டு - நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்

By

Published : Sep 3, 2020, 3:17 PM IST

நாமக்கல் நகரின் மையப்பகுதியான திருச்சி சாலை, மோகனூர் சாலை, பரமத்தி சாலை, பூங்கா சாலை ஆகிய சந்திப்பு மையமாக மணிக்கூண்டு அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதி, ஒரு வழிப்பாதையாக உள்ள நிலையில் மற்றொரு பகுதி இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்லும் வழிப்பாதையாக உள்ளது.

பேருந்து நிலையம் அருகேயுள்ள இப்பகுதியில் அதிகளவு கடைகள் அமைந்துள்ளன. இப்பகுதி முக்கிய சந்திப்பாக உள்ளதால் கடைகளுக்கு வரும் பலரும், தினசரி வெளியூர் சென்று வருபவர்களும் தங்களது இருசக்கர வாகனங்களை மணிக்கூண்டை சுற்றி சாலையில் அப்படியே நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

இதனால் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் காலை, மாலை வேளைகளில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே வாகன நிறுத்தமாக மாறிப்போன மணிக்கூண்டு பகுதியில், வாகனங்களை நிறுத்தாமல் கண்காணித்து போக்குவரத்திற்கு வழி செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details