தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர்களின் கார்களை வழிமறித்த துப்புரவுப் பணியாளர்கள்! - அரசு அறிவித்த முகக்கவசங்கள் வழங்கவில்லை

நாமக்கல்: ராசிபுரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களைக் கேட்டு அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா மற்றும் மாவட்ட ஆட்சியரின் காரை வழிமறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

minister car blocked
minister car blocked

By

Published : Apr 15, 2020, 9:05 AM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியாளர்களாக பணி செய்து வருகின்றனர். அவர்களுக்கு பணிசெய்யும்போது முகக்கவசங்கள், கையுறைகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை கேட்டுள்ளனர். ஆனால், இதுவரை ஏதும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், தற்போது கரோனா வைரஸ் காரணமாக துப்புரவுப் பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். இருப்பினும், நகராட்சி அலுவலர்கள் வழங்காததால் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண் துப்புரவுப் பணியாளர்கள் ராசிபுரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் ஆகியோரின் கார்களை வழிமறித்து, அவர்களை முற்றுகையிட்டு தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

உடனடியாக அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர்கள் உறுதியளித்ததையடுத்து துப்புரவுப் பணியாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீண்டு நாட்டுக்கு முன்னோடியான காசர்கோடு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details