நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள பன்னீர் குத்திபாளையம் அருந்ததியர் தெருவைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஈஸ்வரி, இவரது கணவர் ஈஸ்வரன். இவர்கள் தனது மகன், மகளுடன் தேர்தல் நாளான 02.05.21 அன்று மாலை வீட்டில் இருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், அவரது நண்பர்கள் தேர்தலில் திமுக முன்னிலையில் இருப்பதை அறிந்து பட்டாசு வெடித்து கெண்டாடியுள்ளனர்.
அப்போது ஈஸ்வரியும், அவரது கணவர் ஈஸ்வரனும் எங்கள் வீட்டு முன்பு பட்டாசு வெடிக்க வேண்டாம் தள்ளிச் சென்று வெடியுங்கள் என கூறியதாக தெரிகிறது. இதில், வாய்த் தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கி கொண்டதில் சிலருக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஈஸ்வரி தரப்பினர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், பிரகாஷ், யுவராஜ், தங்கதுரை, தமிழ்ச்செல்வன், யுவராஜ் அடையாளம் தெரியாத ஐந்து பேர் என 10 பேர் தங்களை சாதி பேர் சொல்லி திட்டி தாக்கியதாக திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதேபோல், ஈஸ்வரி தரப்பு மீது பிரகாஷ் என்பவர் ஈஸ்வரி அவரது கணவர் ஈஸ்வரன், மனோஜ் குமார், இளவரசன், ஆத்துகாடுமணி ஆகிய 6 பேர் மீது தங்களை பயங்கர ஆயதங்களை கொண்டு தாக்கியதாக புகார் அளித்தனர். இருதரப்பினர் கொடுத்த புகாரை பெற்றுக்கொண்ட ஊரக காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பிரகாஷ் உள்ளிட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் பிரகாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஈஸ்வரி தரப்பினர் 6 பேர் மீது 506/2 பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:உரிமை கோரினார் ஸ்டாலின்; பதவியேற்பு மட்டும் பாக்கி!