தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தகுந்த இடைவெளியின்றி டாஸ்மாக்கில் குவிந்த மது பிரியர்கள் - மதுப் பிரியர்கள்

நாமக்கல்: தகுந்த இடைவெளி இன்றியும் முகக் கவசங்கள் இன்றியும் மதுப் பிரியர்கள் மது பாட்டிலை வாங்கிச் சென்றனர்.

மது பிரியர்கள்
மது பிரியர்கள்

By

Published : Jul 11, 2020, 9:54 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, ஜூலை மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை (ஜூலை.12) ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாமக்கல்லில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்க மதுப்பிரியர்கள் அதிகளவு குவிந்தனர்.

பெரும்பாலான மதுக்கடைகளில் முகக்கவசம் இன்றியும், தகுந்த இடைவெளியின்றியும் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். மேலும் ஒருசில கடைகளில் கூட்டமாக குவிந்த மதுப்பிரியர்களை டாஸ்மாக் ஊழியர்கள் அப்புறப்படுத்தாமல் மது விற்பனையிலே குறியாக இருந்தனர் என்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது.

ABOUT THE AUTHOR

...view details