நாமக்கல், ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதாக கடந்த ஏப்ரல் மாதம் ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், கடத்தலில் ஈடுபட்ட விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவல்லி என்பவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த கணவர் ரவிச்சந்திரனையும் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
பல கோணங்களில் விசாரணை மேற்கொண்ட ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர், குழந்தைகள் விற்பனை செய்வதற்கு உறுதுணையாக இருந்த இடைத்தரகர்கள் பர்வீன்,ஹசீனா, லீலா, அருள்சாமி, செல்வி ஆகியோரை கைதுசெய்தனர். பின்னர் இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி, இதுதொடர்பாக சேலம் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர் சாந்தி, பெங்களூரை சேர்ந்த ரேகா, அமுதாவின் கார் ஓட்டுநர் நந்தக்குமார் மற்றும் கொல்லிமலையை சேர்ந்த பாதிரியார் கந்தசாமி ஆகியோரை கைது செய்தனர்.