தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறார் ஆபாச படங்களை பதிவேற்றிய ஓட்டல் தொழிலாளிக்கு நீதிமன்ற காவல்! - சிறார் ஆபாச பதிவேற்றம்

நாமக்கல்: சிறார் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க பரமத்திவேலூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Child pornography videos accused judgement
Child pornography videos accused judgement

By

Published : Feb 12, 2020, 5:42 PM IST

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் குருசாமி (35). இவர் சென்னையிலுள்ள தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், போலியாக ஒரு முகநூல் (Facebook) கணக்கு தொடங்கி, செல்போன் மூலம் முகநூல் பக்கத்திலும், வாட்ஸ் ஆப்பிலும் சிறார் ஆபாச பதிவேற்றம் செய்ததை சென்னையில் உள்ள சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் கண்டறிந்தனர்.

இதையடுத்து, சைபர் கிரைம் பிரிவினர் அளித்த தகவலின்படி குருசாமியை தொடர்ந்து கண்காணித்த நாமக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர், குருசாமி தொடர்ந்து சிறார் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருப்பதை கண்டறிந்தனர்.

அதன்படி, நேற்று (பிப். 11) இரவு சிறார் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததற்காக குருசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த நாமக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர், அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சிறார் ஆபாச படங்களை பகிர்ந்த ஓட்டல் தொழிலாளி - நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

பின்னர், குருசாமியை பரமத்திவேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குருசாமியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: நாமக்கலில் சிறார் ஆபாச படங்களை பகிர்ந்த ஓட்டல் தொழிலாளி கைது!

ABOUT THE AUTHOR

...view details