சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் நாமக்கல்லில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசியா மரியம் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின பேரணி - ஆர்வமுடன் மாணவர்கள் பங்கேற்பு - நாமக்கல்
நாமக்கல்: சர்வதேச குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியானது நகரின் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியின் போது "குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்" "குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் கையில் ஏந்தியபடி சென்றனர்.
பேரணிக்கு முன்பு தொழிலாளர்துறை சார்பில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு முறை குறித்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியர் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் கையொப்பமிட்டனர்.