தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி; 11 பேர் கைது! - பாலியல் வன்கொடுமை

இதனைத் தொடர்ந்து வீட்டு வேலைக்கு சென்ற சிறுமியை அந்த வீட்டின் உரிமையாளர் உள்பட சிலர் தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

child abuse case; 11 members arrested
child abuse case; 11 members arrested

By

Published : Apr 13, 2021, 1:18 PM IST

நாமக்கல்: 14 வயது ‌சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 11 பேரை கைது செய்து திருச்செங்கோடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பகுதியில் தறி தொழில் செய்து வரும் தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக 14 வயதுடைய அவர்களது மூன்றாவது மகள் தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். அப்போது வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சிறுமியின் சகோதரி கணவர் சின்ராஜ் என்பவர் சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனை அறிந்த சின்ராஜின் நண்பர்கள், எம்ஜிஆர் நகரை சேர்ந்த குமார், வடிவேல், சுந்தரம் ஆகியோரும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.

தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்ததையடுத்து, நடந்த தகராறில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி 10 ஆயிரம் ரூபாய் வாங்கியதாகவும், அதனை உடல்நல பாதிப்பில் இருந்த சிறுமியின் தந்தையின் சிகிச்சைக்கு பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வீட்டு வேலைக்கு சென்ற சிறுமியை அந்த வீட்டின் உரிமையாளர் உள்பட சிலர் தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்து பெற்றோரிடம் சிறுமி கூறியதை அடுத்து, பெற்றோர்கள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதப் பிரியாவிடம் புகார் அளித்தனர்.‌ புகாரின் பேரில் தீவிர விசாரணை செய்த அலுவலர், நேற்று இது குறித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமாவதி, சம்பவத்தில் தொடர்புடைய 12 பேரில் 11 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் தலைமறைவான ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details