நாமக்கல்: சேந்தமங்கலம் சாலையில் பேட்டை அஞ்சுமனே ஜாமியா மஜுத் என்ற பெயரில், இஸ்லாமியருக்கு சொந்தமான பள்ளி வாசல் உள்ளது. பள்ளிவாசல் வளாகத்தில் ஹிதாயத்துல்லா இஸ்லாம் நற்பணி மன்றத்தின் சார்பாக 5-ஆவது ஆண்டாக 3 ஏழை இஸ்லாமிய பெண்களுக்கு இன்று நிக்காஹ் என்னும் திருமண விழா நடைபெற்றது.
ஏழை பெண்களுக்கு சீர் வரிசையுடன் இலவச திருமணம்... - சீர் வரிசையுடன் திருமணம்
நாமக்கல் நகரில் ஏழை இஸ்லாமியர்கள் குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களுக்கு, இஸ்லாம் நற்பணி மன்றத்தின் சார்பாக 100க்கும் மேற்பட்ட சீர்வரிசைகளுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
ஏழை பெண்களுக்கு சீர் வரிசையுடன் திருமணம் செய்து வைத்த நற்பணி மன்றத்தினர்
இந்த நிகழ்வில் மணமக்களுக்கு தங்க ஆபரணம், வெள்ளி பொருட்கள், கட்டில், பீரோ, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, பாத்திரங்கள் என 100க்கும் மேற்பட்ட சீர்வரிசைகளுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதனை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் பங்கேற்று சீர்வரிசைகளை வழங்கினார்.
இதையும் படிங்க:கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் வகையில் மெரினாவில் பிரமாண்ட பேனா சிலை அமைக்க அரசு திட்டம்