நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகேயுள்ள ஓடப்பள்ளி பகுதியில் வசித்துவருபவர் ராமகிருஷ்ணன் மகன் தேவேந்திரன் (27). இவர் ஈரோட்டிலுள்ள தனியார் செல்ஃபோன் நிறுவனத்தில் கைப்பேசி கோபுர மேலாளராகப் பணிபுரிந்துவருகிறார்.
இந்நிலையில் இவர், தனது வீட்டில் செல்ஃபோனிற்கு சார்ஜ் போட்டபடியே, அதில் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் பேசிய செல்ஃபோனில் வெப்பம் அதிகமாகி மின்கசிவு ஏற்பட்டதோடு தேவேந்திரன் மீது பாய்ந்துள்ளது.
மின்சாரம் பாய்ந்த வேகத்தில் தேவேந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.