தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிசிடிவி காட்சி ; சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் திருட்டு.. - காவல்துறையினர்

நாமக்கல் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை, மர்மநபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் திருட்டு
சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் திருட்டு

By

Published : Jan 3, 2023, 10:28 PM IST

சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் திருட்டு

நாமக்கல்: திருச்செங்கோடு - நாமக்கல் சாலையில் உள்ள பச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரகுகுமார். இவர் அசோக் லேலண்ட் வகை சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டின் அருகே தனது சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு, பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் காலையில் பார்க்கும் போது, நிறுத்தியிருந்த வாகனத்தைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார்.

இந்நிலையில் அருகிலிருந்த பெட்டிக்கடையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, நள்ளிரவு சுமார் 2:30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் வாகனத்தின் கதவைத் திறந்து சர்வ சாதாரணமாக வண்டியில் ஏறி தனது சொந்த வாகனத்தை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளை ரகுகுமார் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.‌

பின்னர் இதுகுறித்து ரகுகுமார் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர் . 24 மணி நேரமும் போக்குவரத்து நடமாட்டம் அதிகமாக இருக்கும் நாமக்கல் பிரதான சாலையில், சாதுரியமாக வாகனத்தைத் திருடிச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:3042 சவரன் தங்க நகைகள் நூதன முறையில் மோசடி: நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details