நாமக்கல் சேலம் சாலையில் இன்று கார் ஒன்று சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது தண்ணீர் லாரி ஒன்று அப்பகுதியில் உள்ள வளைவில் அதிவேகமாக திரும்பியது. அப்போது லாரி காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் லாரியின் அடியில் நசுங்கி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரை ஓட்டி வந்தவர் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து நாமக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்