திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் விடுதலை களம் என்ற தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்பின் சார்பில் செங்கோட்டவேல் என்பவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் . இவரும் இவரது ஆதரவாளர்களும் திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியிலிருந்து நகரத்தின் முக்கிய பகுதிகளுக்கு மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக சென்று பரப்புரை மேற்கொண்டனர்.
மாட்டு வண்டியில் பரப்புரை மேற்கொண்ட சுயேச்சை வேட்பாளர் - தேர்தல் பரப்புரை
நாமக்கல்: திருச்செங்கோடு தொகுதியில் விடுதலை களம் என்ற தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்பின் சார்பில் சுயேச்சை வேட்பாளர் செங்கோட்டுவேல் மாட்டுவண்டியில் வந்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதுகுறித்து செங்கோட்டுவேல் கூறுகையில், "எங்களது சமுதாயத்திற்கு எந்த அரசியல் கட்சியும் உரிய பிரதிநிதித்துவம் தராததால் தனித்து களம் காண்கிறேன். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வாகனங்களை பயன்படுத்த முடியவில்லை. எனவே, மாட்டுவண்டியில் வந்து மக்களை பார்த்து வாக்கு கேட்கிறேன். வெற்றி பெற்றால் விவசாயிகள், தொழிலாளரகள் என அனைவரின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தப் பாடுபடுவேன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:செங்கோட்டையனால் கல்வித்துறை காவித்துறையாக மாறியுள்ளது: மு.க.ஸ்டாலின் விமர்சனம்