தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் - புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நாமக்கலில் சிறப்பு கருத்தரங்கம்

நாமக்கல்: உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மருத்துவச் சங்கத்தின் சார்பில் புற்றுநோயை கண்டறிதல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

cancer awareness conference conducted in namakkal
cancer awareness conference conducted in namakkal

By

Published : Feb 5, 2020, 7:41 AM IST

ஆண்டுதோறும் பிப்ரவரி நான்காம் தேதி உலக புற்றுநோய் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து புற்று நோய் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மருத்துவச் சங்கத்தின் சார்பில் புற்றுநோயைக் கண்டறிதல், தடுப்பு குறித்த கருத்தரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது.

இதில் புற்றுநோய் சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு புற்றுநோயை எவ்வாறு ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது, அதற்கான சுய பரிசோதனை முறைகள், நோய் தாக்கம் கண்டறிப்பட்டால் எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறைகள் ஆகியவை குறித்து எடுத்துக்கூறினர்.

சிறப்பு கருத்தரங்கம்

மேலும் மாறி வரும் உணவுப் பழக்கவழக்கங்கள், மது பழக்கம் ஆகியவையால் அதிகளவு புற்றுநோய் ஏற்படுவதாகவும் தற்போது இளம் வயதிலே புற்றுநோய்கள் அதிகளவு ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் இதனைக் தொடக்கத்திலேயே கண்டறிய 20 வயது முதலே பரிசோதனைகளை மேற்கொண்டால் நோயின் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தனர். கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு 15 சதவீதம் பேர் அதிகளவு புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகி வருவதாகக் கூறிய மருத்துவர்கள், அதனைத் தடுக்க முறையான உணவுப்பழக்கங்களை கடைப்பிடிப்பதோடு, தொடர் பரிசோதனை, சிகிச்சை மூலம் நோயின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ளலாம் என்றனர்.

இதையும் படிங்க: தேசியளவு டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்: முதலமைச்சர் வாழ்த்து

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details