தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே பூர்வீக சொத்து அளவீடு பணி: முன்னாள் அமைச்சர் தங்கமணி - லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

பொதுமக்கள் மத்தியில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னிலையில் பூர்வீக சொத்து அளவீடு பணி நடைபெற்றது என முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் சொத்து மதிப்பு கணக்கீடு; லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை
முன்னாள் அமைச்சர் சொத்து மதிப்பு கணக்கீடு; லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

By

Published : Jul 20, 2022, 10:01 PM IST

நாமக்கல்: முன்னாள் அமைச்சர் தங்கமணி கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த போது, 4.85 கோடி ரூபாய், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

முன்னாள் அமைச்சர் தங்கமணி

இந்நிலையில் இன்று லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் முன்னிலையில் வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள், முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டினை நான்கு பக்கவாட்டு சுவர் நீளம்,‌ அகலம் வீட்டில் உள்ள அறைகள் உள்ளிட்ட கட்டட மதிப்பினை அளவீடு செய்தனர்.

தொடர்ந்து திருச்செங்கோடு சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இரண்டு கடைகள் மற்றும் அம்மன் கோயில் வீதியில் உள்ள சாயஆலை அமைந்துள்ள இடத்தினை அளவீடு செய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேலாக தங்கமணிக்கு சொந்தமான 5000 சதுர அடிக்கு மேலான அசையா சொத்து மதிப்பை அளவீடு செய்யும் பணிகள் நிறைவுபெற்றன.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதின் அடிப்படையில் 60 ஆண்டுகள் பழமையான பூர்வீக சொத்தை அளவீடு செய்யும் பணிகள் மட்டுமே இன்று நடைபெற்றதாக கூறிய அவர், இதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் தனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நீதிமன்றம் ஈபிஎஸ் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதற்கு தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தருமமே வெற்றி பெறும் என்பதற்கு சான்றாக உள்ளதாகவும் எதிர்தரப்பு எங்கே சென்றாலும் முடியாது, நியாத்தின் பக்கம் நாங்கள் உள்ளதால் எங்களுக்கு சாதகமாக இருக்கும் எனவும் தங்கமணி தெரிவித்தார்.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்களுக்கு மாற்றிடத்தில் வகுப்புகள் தொடங்கும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details