நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை (செப்.1) பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். ஏலத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், பவித்ரம், துறையூர் முசிறி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
மழையால் ஏலத்துக்கு வைக்கப்பட்ட பருத்தி மூட்டைகள் நாசம்! - Bundles of cotton kept for auction
நாமக்கல்: மழையால் ஏலத்திற்கு வைத்திருந்த பருத்தி மூட்டைகள் நனைந்து நாசமாகின. இதன் காரணமாக பருத்தி மூட்டைகளுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
![மழையால் ஏலத்துக்கு வைக்கப்பட்ட பருத்தி மூட்டைகள் நாசம்! பருத்தி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8645888-531-8645888-1599008299381.jpg)
ஏலத்தில் ஆர்.சி.ஹெச். ரகம் குவிண்டாலுக்கு ரூ.4,642 முதல் ரூ.5,089 வரையிலும் சுரபி ரகம் குவிண்டாலுக்கு ரூ.4,799 முதல் ரூ.5,050 வரையிலும் ஏலத்திற்கு விடப்பட்டது. ஏலத்தில் இரண்டாயிரம் மூட்டைகள் 30 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. பருத்தி விலை கடந்த வாரத்தைவிட, குவிண்டாலுக்கு 200 ரூபாய் வரை குறைந்தது.
இந்நிலையில், நாமக்கல்லில் நேற்று(செப்.2) திடீரென பெய்த மழையால் ஏலத்திற்கு வைத்திருந்த பருத்தி மூட்டைகள் அனைத்தும் நனைந்தன. இதன் காரணமாக, பருத்தி எடையும் குறைக்கப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்தனர். ஏலத்தில் சேலம், மகுடஞ்சாவடி, திருப்பூர், ராசிபுரம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 15-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டு பருத்திகளைக் கொள்முதல் செய்தனர்.