நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த மதியம்பட்டி பகுதியில் சேலம் ஏற்காட்டில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு ஓடுகிறது. மதியம்பட்டியில் திருமணிமுத்தாறின் குறுக்கே உயர்மட்டப்பாலம் அமைக்கும் பணி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதற்காக தற்காலிக பாலமொன்று அமைக்கப்பட்டு அதனை பொதுமக்கள் பயன்படுத்திவந்தனர்.
ராசிபுரம் அருகே கனமழையால் பாலம் உடைந்து போக்குவரத்து பாதிப்பு! - salem thirumanimutharu update news
நாமக்கல்: தொடர் கனமழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மதியம்பட்டி தரைப்பாலம் உடைந்ததால், ஐந்து கிராமங்களுக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது.
namakkal
கடந்த ஒரு வாரமாக சேலத்தில் பெய்து வரும் கனமழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மதியம்பட்டி, சௌரிபாளையம், கல்கட்டனூர், பொரசபாளையம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இதையும் படிங்க: பாலம் வேண்டும் - கோரிக்கை வைக்கும் கடம்பூர் மலைப் பகுதி மக்கள்