நாமக்கல் மாவட்டம் கூலிப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் நந்தகுமார் (16). இவர் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். நேற்று முன்தினம் (அக். 11) நந்தகுமார் நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் விளையாடச் சென்றுள்ளார்.
இரவு ஆகியும் சிறுவன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனின் நண்பர்கள் வீடுகளில் தேடிவந்தனர்.
இந்நிலையில், நேற்று (அக்.12) இரவு கல்குவாரி குட்டையில், சிறுவன் சடலமாக மிதந்துள்ளார். இதனைக் கண்ட நபர் ஒருவர் நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.