தர்மபுரி: பாப்பாரப்பட்டியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமுத பெருவிழா பாதை யாத்திரத்தை பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி ராமலிங்கம் துவக்கி வைத்தார்.
பேரணியானது பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் வரை சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாஜகவினர் கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர். அப்போது சுப்பிரமணிய சிவா நினைவு இடத்தில் அமைந்துள்ள பாரதமாதா நினைவாலயத்தில் மாலை அணிவிக்க பாஜகவினர் முயன்றுள்ளனர்.
அப்போது பாரதமாதா நினைவாலயத்தில் இருந்த கதவுகள் பூட்டி இருந்த நிலையில் அங்கு பணியாற்றும் கண்காணிப்பாளரிடம் கதவு திறக்கும்படி வலியுறுத்தினார். கதவு திறக்கப்படாத நிலையில் பாஜகவின் மாநில துணைத்தலைவர் கே. பி ராமலிங்கம் பாரதமாதா கோவிலின் பூட்டை உடைத்து பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்துள்ளார்.
கே.பி.ராமலிங்கம் திடீரென கைது சம்பவம் தொடர்பாக அத்துமீறி பாரதமாதாவின் சிலைக்கு மாலை அணிவித்ததாக கூறி பாப்பிரெட்டி பட்டி காவல்துறையினர் இன்று வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள கே.பி ராமலிங்கம் அவரது இல்லத்தில் பாப்பாரப்பட்டி காவல்துறையினர் மற்றும் ராசிபுரம் காவல்துறையினர் உட்பட 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாஜக மாநில துணைதலைவர் ராமலிங்கத்தை கைது செய்த அழைத்துச் சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அமைச்சர் கார் மீது காலணி வீச்சு என்பது கண்டிக்கத்தக்கது என அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி