நாமக்கல் : திருச்செங்கோடு, மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவர், தனது வீட்டிற்கு வரி அதிகமாக விதிக்கப்பட்டுள்ளது என்றும், அதனைக் குறைத்துத் தரவேண்டும் என்றும், வரி வசூல் செய்யும் பணியாளர் ஆனந்தகுமாரிடம் கேட்டுள்ளார்.
இந்நிலையில், வரியை குறைப்பதற்காக சண்முகத்திடம் ஆனந்தகுமார் 7,000 ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார். பின்னர், அது 5,000 ரூபாயாக குறைத்து பேசப்பட்டு, முதல் தவணையாக 3,500 ரூபாய் தருவதாக சண்முகம் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் மற்றொரு புறம், சண்முகம் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினரிடம் புகாரும் செய்தார். இப்புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறை ஆய்வாளர் நல்லம்மாள் தலைமையில், எட்டு பேர் கொண்ட காவலர்கள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சண்முகத்திடம் கொடுத்தனுப்பினர்.