நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் 2500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை, வெற்றிலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மே 3ஆம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.
இதன் காரணாமாக வெற்றிலை, வாழை விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் வெற்றிலை, வாழை விவசாயிகளுக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும்;