தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொல்லிமலையில் உள்ள அருவிகளில் குளிக்கத் தடை!

நாமக்கல்: கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அருவிகளில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகள் செல்லவும், குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Bathing in waterfalls in Kollimalai is prohibited  குளிக்கத் தடை  கொல்லிமலையில் உள்ள அருவிகளில் குளிக்கத் தடை  ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி  Agaya Gangai Falls  Prohibition of bathing
waterfalls in Kollimalai

By

Published : Jan 1, 2021, 7:01 AM IST

நாமக்கல் மாவட்டத்தின், மூலிகை சுற்றுலாத் தலமாக விளங்கும் கொல்லிமலை கடல்மட்டத்திலிருந்து 1400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி ஆகியவை அமைந்துள்ளது. இந்நிலையில், கொல்லிமலையில் உள்ள அனைத்து அருவிகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் செல்லவும், குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

குளிக்கத் தடை

இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் கூறுகையில், "கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாகவும், விபத்தில்லா புத்தாண்டை கொண்டாடும் வகையில், கொல்லிமலையில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொல்லிமலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது இன்று மாலை முதல் மறு உத்தரவு வரும் வரை தொடரும்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

ABOUT THE AUTHOR

...view details