தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடையை மீறி செயல்பட்ட வங்கி - அலுவலர்களுடன் வைத்துப் பூட்டி வங்கிக்கு சீல் - தமிழ்நாடு செய்திகள்

நாமக்கல்: பரமத்தி வேலூரில் தடையை மீறி செயல்பட்ட இந்தியன் வங்கியை அலுவலர்கள் உள்ளே வைத்து வருவாய் துறையினர் பூட்டி சீல் வைத்தனர். பட்டது.

தடையை மீறி செயல்பட்ட வங்கிகள், அலுவலர்களுடன் வைத்துப் பூட்டி வங்கிக்கு சீல்
தடையை மீறி செயல்பட்ட வங்கிகள், அலுவலர்களுடன் வைத்துப் பூட்டி வங்கிக்கு சீல்

By

Published : Apr 29, 2020, 3:28 PM IST

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில், பரமத்திவேலூரில் செயல்படும் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான கிளை வங்கிகள், நிதி நிறுவனங்களில் கூடும் பொது மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் மணிராஜ் வங்கிகளை இயக்க தடை விதித்திருந்தார்.

தடையை மீறி செயல்பட்ட வங்கிகள், அலுவலர்களுடன் வைத்துப் பூட்டி வங்கிக்கு சீல்

ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கி மே 3ஆம் தேதிவரை இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தடையை மீறி இந்தியன் வங்கி, கனரா வங்கி, நகரக் கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இயங்கி வந்த இந்தியன் வங்கிக்கு சென்ற பரமத்தி வேலூர் வட்டாட்சியர் செல்வராஜ், வருவாய் துறை அலுவலர்கள் இணைந்து, வங்கியை பூட்டி சீல் வைத்தனர்.

தடையை மீறி செயல்பட்ட வங்கிகள், அலுவலர்களுடன் வைத்துப் பூட்டி வங்கிக்கு சீல்

வங்கியில் இருந்த மேலாளர், அலுவலர்கள் என ஆறு பேரை உள்ளேயே வைத்து வங்கிக் கதவைப் பூட்டி அலுவலர்கள் சீல் வைத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்திவேலூர் காவல் துறையினர், இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி, பூட்டை உடைத்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வங்கியில் இருந்தவர்களை மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

தடையை மீறி செயல்பட்ட வங்கிகள், அலுவலர்களுடன் வைத்துப் பூட்டி வங்கிக்கு சீல்

அதன் பின் மீண்டும் வங்கிக்கு சீல் வைக்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக பரமத்தி வேலூரில் அலுவலர்களுடன் வங்கி, பூட்டி சீல் வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:'பள்ளிவாசல்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் அரசாணைக்கு எதிரான வழக்கு' - உயர் நீதிமன்றம் நிராகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details